...இன்றைய சுவையின் வலைதளத்தின் வருகைக்கு நன்றி...

Tuesday, January 11, 2022

“உயிர் வேலி வேளாண்மை” - உயிர் வேலி

UYIR VELI

‘‘காற்று போகும் இடத்தில் இருக்கும் ஈரத்தை எல்லாம் உறிஞ்சுகிட்டு, நிலத்தை உலரவைச்சிட்டுப் போயிடும். காற்று ஈரத்தை எடுத்துட்டுப் போகாம தடுக்குறதுதான் உயிர் வேலி வேளாண்மை.

உயிர் வேலி வேளாண்மை

சௌண்டல், அகத்தி, கிளரிசிடியா, நொச்சி மாதிரியான பயிருங்களை வேலிப்பயிரா நட்டு, உயிர்வேலி அமைச்சுக்கணும்.

வேலியோரமா வளந்து நிக்குற மரங்க, காத்தோட வேகத்தை தடுத்து, நிலத்துல இருக்கற ஈரப்பதத்-தைத் தக்க வைச்சுக்கும். உயிர்வேலியை மழைக்-காலத்துல நட்டுட்டா, நல்லா வேர் பிடிச்சுக்கும். பிறகு எந்த வறட்சியிலும் காஞ்சு போகாது.

தோட்டத்திற்கு ஒரு நல்ல வேலி மிகவும் அவசியம். உயிர் வேலியே மற்ற வேலிகளைவிட சிக்கனமாகும். வறட்சி எதிர்ப்புத்திறன்,விதையின் மூலம் சுலபமான பயிர் பெருக்கம், விரைவான வளர்ச்சி அடர்த்தியான இலைகள், கடும் கவாத்திற்கு தாங்கும் திறனுடன் இருக்கும் செடிகள் உயிர் வேலிக்கு ஏற்றவையாகும்.

காற்றுத் தடுப்புக்கு தோட்டத்தைச் சுற்றிலும் பல வரிசைகளில் நடப்பட்டு காற்றின் வேகத்தை குறைப்பதால் காற்று அதிகமாக வீசும் பகுதிகளில் காற்றுத் தடுப்பு வேலியானது மிகவும் முக்கியத்துவம் பெறுகின்றது. பொதுவாக காற்றுத் தடுப்பு வேலி உயரத்தைவிட நான்கு மடங்கு தூரம் திறம்பட செயல்படும்.

வேலிமசால், கிளுவை போன்றவற்றை உயிர் வேலியாக அமைப்பதன் மூலம் அவற்றை கவாத்து செய்யும் போது கால்நடைகளுக்கு தீவனமாகவும் பயன்படுத்தலாம். 

விளை நிலத்தைப் பாதுகாக்க மரம், செடி, கொடி போன்றவற்றால் அமைக்கும் வேலி உயிர் வேலி (Live Fencing) எனப்படுகிறது. உயிருள்ள தாவரங்களினால் அமைக்கப்படுவதாலும், பல உயிர்கள் இதில் வாழ்வதாலும் உயிர் வேலி என்றழைக்கப்படுகிறது. விளை நிலத்தை விலங்குகளிடமும், மனிதர்களிடமும் இருந்து பாதுகாக்கவும், சூறாவளி காற்றிலிருந்து பயிரை பாதுகாக்கவும் உயிர் வேலி அமைக்கப்படுகிறது. பயிரை விளைவிக்க வரும் செலவை விட அதனை பாதுகாக்க அமைக்கும் செயற்கை கம்பி வேலியின் செலவு மிகுதியானது. இயற்கை உயிர் வேலி அமைப்பதனால் நிலத்தை பாதுகாப்பது மட்டுமல்லாமல், உயிர் வேலியிலும் விளைச்சலை பெறலாம். ஒவ்வொரு நிலப்பகுதிக்கும் உயிர்வேலிகள் மாறுபடும். அந்தந்த மண்ணுக்கும், சூழலுக்கும் ஏற்ப தகுந்த உயிர் வேலியை அமைக்க வேண்டும். வேலியில் முள் வேலியே முதன்மையாகப் பயன்படுத்தப்படுகிறது. ஐந்தடுக்கு உயிர் வேலி வகைகளும் உண்டு. சரியான மழைக்காலங்களில் உயிர் வேலி அமைப்பதால் தொடக்கத்தில் மழை நீர் வழியாக உயிர் பிடித்து பின்னர் வறட்சியைத் தாங்கி, நீண்ட பலன் தரும் அரணாக உயிர்வேலி அமைகிறது.

 உயிர் வேலியில் பயன்படுத்தப்படும் மரங்கள்:

  • முள் மரங்களான முள்கிழுவை, பரம்பை, இலந்தை, ஒத்தக்கள்ளி, கொடுக்காப் புளி, பனை மரம் வெள் வேல், குடை வேல் போன்றவற்றை வளர்க்கலாம்.
  • சவுண்டல், மலை வேம்பு, சவுக்கு, நுனா போன்ற நீள்குடை மரங்களை வளர்க்கலாம்.
  • கால்நடை தீவனங்களான அகத்தி, முள்முருங்கை, மலைக்கிழுவை, ஆமணக்கு ஆகியவற்றை வளர்க்கலாம்.
  • மூலிகைகளான பிரண்டை, முடக்கத்தான், நொச்சி, கோவக்கொடி அதோடு சூரை, பீர்க்கங்காய், பாகற்காய் என விவசாயிகள் தங்கள் தேவைக்கு ஏற்ப உயர் வேலிகள் அமைக்கலாம்.

 

உயிர்வேலியின் பயன்கள்:

  • விளை நிலத்தை பாதுகாக்கவும், மண் அரிப்பைத் தடுக்கவும் மற்றும் சூறாவளி காற்றால் பயிர்கள் சேதமடைவதைத் தவிர்க்கவும் பயன்படுகிறது.
  • ஆடு மாடுகளுக்கு தீவனமாக, வயலுக்கு பசுந்தாள் உரமாக பயன்படுகிறது.
  • காய்கனிகள், கீரைகள், மூலிகைகள் உற்பத்தி செய்ய பயன்படுகிறது. இதன்மூலம் விவசாயிகளின் வருவாய் மேம்படும்.
  • பறவைகளுக்கு உணவு, உறைவிடமாகவும் பயன்படுகிறது.
  • தேன் கூடுகள் அதன் அருகில் அமைப்பதின் மூலமாகவும் நன்மைகளைப் பெறலாம்.
  • உயிர் வேலிகள் விறகுக்காகவும், மரச்சாமான்களுக்காகவும் பயன்படுகிறது.
  • இது மட்டுமின்றி காற்றின் மூலன் பரவக்கூடிய பூஞ்சாண நோய்க் காரணிகள் மற்ற வயலிலிருந்து பரவுவதைத் தடுக்கும் அரணாக விளங்குகிறது.
  • எனவே ஒவ்வொரு விவசாயியும் தங்களுடைய நிலத்தில் உயிர்வேலி அமைப்பதன் மேற்கூறியுள்ள நன்மைகளைப் பெற முடியும்.

இவ்வாறு 67 தாவர வகைகள் வேலி அமைப்பிற்கானவை எனக் கண்டறியப்பட்டுள்ளன.   

ஒரு உயிர் வேலி அழிந்தால், அந்த இடத்தில் எதிர்மறையாக பல்வேறு விளைவுகள் வரும். சுற்றுசூழலிற்கு இணக்கமான வேலிகள் அமைப்பது நம் கையில்தான் உள்ளது.

Monday, November 6, 2017

தங்க மரம் யூகலிப்டஸ் - மரம் வளர்ப்போம்

யூகலிப்டஸ் மரங்களுக்கு பாயும் தண்ணீர் ஆஸ்திரேலியாவை சேர்ந்த விஞ்ஞானிகள் யூகலிப்டஸ் மர இலைகளில
் தங்கம் இருப்பதாக கண்டறிந்துள்ளனர்.

யூகலிப்டஸ் மரத்தின் இலையின் நரம்புகளில் தங்கம் காணப்படுகிறது. இம்மரத்தின் வேர்கள் பூமியில் பல மீட்டர் ஆழம் வரை சென்று நீரை உறிஞ்சிக்கொள்ளும் சக்திபடைத்ததாகும். 

சுமார் 10 மீட்டர் உயரம் வரை வளரும் யூகலிப்டஸ் மரத்தின் வேர்கள் 40 மீட்டர் வரை பூமிக்கு அடியில் சென்று நீரை தேடும். இம்மரத்தின் வேர்கள் தங்கம் போன்ற உலோகங்கள் புதைந்து கிடக்கும் இடத்தையும் தாண்டி தண்ணீர் தேடிச் செல்லும் தன்மை கொண்டவையாகும். அவ்வாறு தேடும் வேர்கள் பூமிக்கு அடியில் இருக்கும் நீரை உறிஞ்சும்போது அதனுடன் சேர்ந்து அந்த இடங்களில் இருக்கும் தங்கத்தையும் சேர்த்து உறிஞ்சிக்கொள்ளுமாம். 

மேலும் எந்த இடங்களில் பெருமளவில் தங்கம் புதைந்திருக்கும் என்ற தகவலையும் இந்த கண்டுபிடிப்பு தெரிவித்துள்ளது. 

தங்கம் தாவரங்களின் செல்களுக்குள் இருக்கும் தன்மையில்லாததால் நீருடன் உறிஞ்சப்படும் தங்கமானது மரத்தின் உச்சியான இலைகளுக்கு அனுப்பப்படுகிறது என்றும் யூகலிப்டஸ் மர இலையில் மிக மிக சிறிய அளவில்தான் தங்கம் காணப்படுகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


நன்றி:http://tamil.webdunia.com